உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  நெற்பயிரை நாசம் செய்யும் மாடுகள் வெடால் கிராம விவசாயிகள் வேதனை

 நெற்பயிரை நாசம் செய்யும் மாடுகள் வெடால் கிராம விவசாயிகள் வேதனை

செய்யூர்: வெடால் கிராமத்தில், நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை மாடுகள் நாசம் செய்வதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வெடால், பாளையூர், தண்ணீர்பந்தல், கடுக்கலுார் உள்ளிட்ட கிராமங்களில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆண்டுதோறும் இப்பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. தற்போது, சம்பா பருவத்தில் நெல் பயிரிடும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெடால் கிராமத்திற்கு உட்பட்ட வயல்வெளியில் உள்ள நெல் நாற்றுகள், நெல் பயிர்களை மாடுகள் நாசம் செய்வதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். குறிப்பாக, இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கப்பிவாக்கம், பனையூர், நல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் மாடுகளின் உரிமையாளர்கள், தங்களது மாடுகளை முறையாக கட்டி பராமரிக்காமல் அவிழ்த்துவிட்டு விடுகின்றனர். இதனால், அவை இஷ்டத்திற்கு வயல்வெளியில் இறங்கி பயிர்களை நாசம் செய்து வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம், இடைக்கழிநாடு பகுதியில் மாடுகள் வளர்ப்பவர்களை அழைத்து கூட்டம் நடத்தி, மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை