உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ---அகத்தீஸ்வரர் கோவிலில் கொடி மரம் பிரதிஷ்டை

 ---அகத்தீஸ்வரர் கோவிலில் கொடி மரம் பிரதிஷ்டை

வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், அகத்தீஸ்வரர் கோவிலில், 18 லட்சம் ரூபாயில் கொடிமரம் புதுப்பித்து, நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. வில்லிவாக்கத்தில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கொடிமரம் சேதமடைந்து இருந்ததால், அதை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். நம் நாளிதழிலும் செய்தி வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் மரம் சீரமைக்கும் பணியை துவங்கியது. தொடர்ந்து நேற்று, புதிதாக கொடி மரத்தை அமைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதுகுறித்து, கோவிலில் செயல் அலுவலர் கூறுகையில், 'உபயதாரர் நிதி 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரத்தில் செம்பு தகடுகள் பதிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் நடக்கும் கும்பாபிஷேகத்தில் குடமுழுக்கு செய்யப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை