உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் வாரியத்தை ஏமாற்றி கூடுதல் இணைப்பு தில்லாலங்கடி! மோசடியை கண்டுபிடித்து ரூ.1.78 கோடி வசூல்

குடிநீர் வாரியத்தை ஏமாற்றி கூடுதல் இணைப்பு தில்லாலங்கடி! மோசடியை கண்டுபிடித்து ரூ.1.78 கோடி வசூல்

சென்னை குடிநீர் வாரியத்தை ஏமாற்றி வீட்டிற்கு கூடுதல் இணைப்பு, வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தியது உள்ளிட்ட தில்லாலங்கடியை, வாரியம் கண்டுபிடித்துள்ளது. மின் நுகர்வோரின் பட்டியலை வைத்து நடந்த கணக்கெடுப்பில், இந்த மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக 2,563 பேரிடம் இருந்து ரூ.1.78 கோடி ரூபாய் வசூலிக்கும் நடவடிக்கையில், வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், 13.35 லட்சம் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் உள்ள நிலையில், தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வரியாக, 13.96 லட்சம் பேரும், கட்டணமாக, 9.13 லட்சம் பேரும் செலுத்துகின்றனர்.குடிநீர், கழிவுநீரை பொறுத்தவரை வீட்டு இணைப்பு, வணிகம் சார்ந்த இணைப்பு மற்றும் தற்காலிக இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் தற்காலிக இணைப்பு, பழைய வீட்டை இடித்து புதிதாக கட்டும் காலத்தில் வழங்கப்படுவது.இதற்கு, 25,000 ரூபாய் செலுத்தினால், ஒரு கை பம்ப் குடிநீர் இணைப்பு மற்றும் ஒரு கழிப்பறை வசதியில் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும். இந்நிலையில், கட்டடம் கட்ட 'பிளான்' வாங்கும் போது, புது இணைப்புக்கான சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தி, புது இணைப்பு வாங்க வேண்டும்.ஆனால் சிலர் வங்கிக் கடன், சொத்து பரிமாற்ற தேவைக்காக பழைய வீட்டை இடித்து மாடி வீடு கட்டியிருப்பர். இதற்காக புது இணைப்பு பெற்று, முதல் அரையாண்டுக்கான வரி மற்றும் கட்டணத்தை செலுத்தியிருப்பர்.அடுத்த நிதியாண்டிற்கு புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு புதிய வரி செலுத்த வேண்டும். ஆனால், பழைய கட்டடத்தின் ரசீதை வைத்து குறைந்த வரியும், கட்டணமும் செலுத்துவர். புதிய வீட்டிற்கு நிர்ணயித்த வரியை மறைத்துவிடுவர்.இதனால், குடிநீர் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், வீட்டு பயன்பாட்டிற்கு இணைப்பு பெற்று, வணிக பயன்பாட்டிற்கு அதை பயன்படுத்துகின்றனர். இதிலும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இந்த முறைகேடுகளை கண்டுபிடிக்க, குடிநீர் வாரியத்தில் போதிய ஊழியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இல்லை. மாநகராட்சியின் வரி மதிப்பீட்டை வைத்து, குடிநீர் வாரியம் வரி வசூலிக்கிறது.வீடு, வணிக பயன்பாடு குறித்த துல்லியமான பட்டியல், குடிநீர் வாரியத்திடம் இல்லை. ஆனால், மின் வாரியத்திடம் 99 சதவீத நுகர்வோரின் பட்டியல் துல்லியமாக இருப்பதாக, குடிநீர் வாரியம் நம்புகிறது.இதனால், மின் வாரியத்திடம் இருந்து குறிப்பிட்ட நுகர்வோரின் முகவரியை பெற்று, குடிநீர் வாரிய நுகர்வோரின் முகவரியுடன் ஒப்பிட முடிவு செய்யப்பட்டது.இதற்காக, மின் வாரியத்திடம் இருந்து, 36 ஆயிரத்து 740 நுகர்வோரின் முகவரியை பெற்று, மண்டல வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. இதை வைத்து, குடிநீர் வாரிய ஊழியர்கள், நேரடியாக சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.இந்த பணி, கடந்த 2022ல் துவங்கியது. தற்போது, 100 சதவீதம் ஒப்பீடு பணி முடிவடைந்தது. இதில், மொத்தமுள்ள, 36 ஆயிரத்து 740 பேரின் விபரங்களை ஒப்பிட்டதில், 2,563 பேர், வணிக பயன்பாட்டு வரியை மறைத்தது தெரிந்தது.இதனால், 1.78 கோடி ரூபாய் குடிநீர் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. இந்த தொகையை மொத்தமாக வசூலிக்கும் பணியை கடந்த ஆண்டு துவங்கியது. இந்த பணிகள், இறுதிக்கட்டத்தில் உள்ளன.இது போன்ற முறைகேடு நடப்பதை விரைந்து கண்டறிவதற்காக, வணிக பயன்பாடு, இரு வரி மதிப்பீடு மோசடி குறித்து அறிய, ஆண்டுதோறும் ஒப்பீடு செய்யும் பணியை நடத்தவும், வாரியம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின் வாரிய ஊழியர்கள், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாக சென்று, மின் கணக்கீடு செய்வதால், வீடா அல்லது வணிக பயன்பாடா என தெரிந்து விடும்.இதன் அடிப்படையில், மின் வாரிய முகவரியை பெற்று, குடிநீர், கழிவுநீர் இணைப்புடன் ஒப்பீடு செய்ததில், 2,563 பேரின் இணைப்பில் வித்தியாசம் கண்டுபிடித்தோம்.இதன்படி, மின் வாரியத்தில் எப்போதிருந்து வணிக பயன்பாட்டில் உள்ளதோ, அப்போதிருந்து, வணிக பயன்பாடு அடிப்படையில் நோட்டீஸ் வழங்கி, 1.78 கோடி ரூபாய் குடிநீர் வரி மற்றும் கட்டணம் வசூலித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏற்படுத்தும் காரணங்கள்

* சுயமதிப்பீட்டின் போது, கட்டடத்தின் பரப்பளவை குறைத்துக் காட்டுவது* வீடு கட்ட 'பிளான்' வாங்கி, புதிய இணைப்பு பெற்று, பின் வீட்டை வணிக பயன்பாட்டிற்கு மாற்றிவிட்டு, இணைப்பை வணிக பயன்பாடாக மாற்றாமல் இருப்பது* வீட்டின் ஒரு பகுதியை வணிக பயன்பாட்டிற்கு மாற்றிவிட்டு, அதை வாரியத்திடம் தெரிவிக்காமல் மறைப்பது * வீட்டு கட்டடத்தில் கூடுதல் தளம் கட்டி, அதை வணிக பயன்பாடாக மாற்றி, வரி ஏய்ப்பு செய்வது.

மண்டலம் மின் நுகர்வோர் வேறுபாடு கண்டுபிடிப்பு நுகர்வோர் கண்டுபிடித்த தொகை (லட்சத்தில்)

திருவொற்றியூர் 2,565 312 4.87மணலி 217 10 1.85மாதவரம் 113 7 0.99தண்டையார்பேட்டை 3,120 114 8.24ராயபுரம் 1,031 80 3.22திரு.வி.க., நகர் 2,036 152 8.82அம்பத்துார் 4,810 690 19.70அண்ணா நகர் 1,286 43 0.85தேனாம்பேட்டை 1,773 65 20.48கோடம்பாக்கம் 8,355 301 26.81வளசரவாக்கம் 244 20 0.24ஆலந்துார் 3,076 329 28.30அடையாறு 6,516 299 30.27பெருங்குடி 367 66 7.56சோழிங்கநல்லுார் 1,231 75 6.17மொத்தம் 36,740 2,563 178.37

அதிக வேறுபாடு

சென்னையிலுள்ள மொத்த மண்டலங்களில், மின் நுகர்வோர் கணக்கை குடிநீர் வாரியம் ஒப்பீடு செய்ததில், அதிகபட்சமாக அம்பத்துார் மண்டலத்தில், 4,800 பேரில், 690 பேரின் கணக்கில் வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதல் தொகை செலுத்த வேண்டிய மண்டலமாக அடையாறு உள்ளது. இங்கு 299 பேரிடம், 30.27 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

மாடன்
மே 08, 2024 09:08

ஆம்.. வாரிய அதிகாரிங்களுக்கு லஞ்சம்.குடுக்காம இணைப்பு வந்துருமாக்கும். போங்க. நாம எல்லோரும் திருட்டு திராவிடனுங்கதான்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை