உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10 நிமிடங்களுக்கு 1 இணைப்பு வாகனம்

10 நிமிடங்களுக்கு 1 இணைப்பு வாகனம்

10 நிமிடங்களுக்குஒரு இணைப்பு வாகனம்நெரிசல் மிக்க மெட்ரோ ரயில் நிலையங்களில், இணைப்பு வாகன வசதியை விரிவுப்படுத்த, திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:மெட்ரோ ரயில்களில் பயணியருக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். குறிப்பாக, பெண் பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அந்தவகையில், சென்ட்ரல், ஆலந்துார் போன்ற, பயணியர் அதிகமாக வரும் முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு இணைப்பு வாகன வசதியை கொண்டுவர உள்ளோம். இதற்காக, தனியார் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட உள்ளது.அதாவது, இணைப்பு வாகனங்களில் பயணியர் கூட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 10 நிமிடங்கள் ஆனவுடனே தாமதம் இன்றி, அவ்வாகனம் இயக்க வேண்டும்.இதனால், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஏற்படும் இழப்பை நிர்வாகம் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இதனால், பயணியர் தாமதம் இன்றி விரைவாக பயணம் மேற்கொள்ள முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை