உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற 2 பேர் கைது ஒருவருக்கு வலை

கஞ்சா விற்ற 2 பேர் கைது ஒருவருக்கு வலை

சென்னை:சென்னையில், ஒ.சி.ஐ.யு., எனும் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் கஞ்சா வியாபாரிகள் குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களுக்கு, வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரி அருகே, மர்ம நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஒ.சி.ஐ.யு., பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி மற்றும் சந்திரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.அப்போது, கஞ்சாவுடன் சுற்றிய, சிதம்பரத்தைச் சேர்ந்த நுாருல் ஹாலிப், 36, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது, 24, ஆகியோரை கைது செய்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த அசரப் அலி, 40, என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்