உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் மீது மோதியதால் தீ பற்றி எரிந்த கார்

கார் மீது மோதியதால் தீ பற்றி எரிந்த கார்

பள்ளிக்கரணை, சென்னை அடுத்த சிங்கபெருமாள் கோவில், நேதாஜி தெருவை சேர்ந்தவர் சபரிநாதன், 24. இவர், கூடுவாஞ்சேரி அருகே இயங்கி வரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, நிறுவனத்தில் பணிபுரியும் இரு பெண் ஊழியர்கள் மற்றும் ஒரு காவலாளியை பள்ளிக்கரணையில் விடுவதற்காக, காரில் சென்று கொண்டு இருந்தார். பல்லாவரம்- - துரைபாக்கம் ரேடியல் சாலை, கோவிலம்பாக்கம் சந்திப்பில் வலது பக்கம் திரும்பும் போது, திடீரென முன்னால் சென்ற கார் மீது, சபரிநாதன் ஓட்டி சென்ற கார் மோதியது. இதையடுத்து, காரின் முன் பகுதி திடீரென்று தீ பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக காரில் இருந்து அனைவரும் வெளியேறி தப்பினர். இந்த விபத்தில் சினேகா என்ற பெண்ணுக்கு முகத்தில் தீ காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வழியில் சென்ற தண்ணீர் லாரியை மடக்கி, காரில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ