உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லோடு ஆட்டோ மோதி கல்லுாரி மாணவர் பலி

லோடு ஆட்டோ மோதி கல்லுாரி மாணவர் பலி

பல்லாவரம், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ், 20. அவரது நண்பர் கவுசிக், 20; இருவரும், சேலையூர் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று காலை இருவரும், 'யமஹா' இருசக்கர வாகனத்தில் கல்லுாரிக்கு சென்றனர். பல்லாவரம் மேம்பாலத்தில் வாகன நெரிசலை தவிர்க்க, எதிர் திசையில் பயணித்தனர். அப்போது, குரோம்பேட்டையில் இருந்து ஏர்போர்ட் நோக்கி சென்ற லோடு ஆட்டோ மோதியது. இதில், வாகனத்தை ஓட்டிச் சென்ற கவுசிக்கிற்கு கால் முறிவு ஏற்பட்டது. பின்னால் அமர்ந்து சென்ற ஆகாஷ் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து தொடர்பாக, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீார் வழக்கு பதிந்து, லோடு ஆட்டோ ஓட்டுனரான கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத், 25, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ