| ADDED : ஜூலை 03, 2024 12:14 AM
புளியந்தோப்பு,புளியந்தோப்பு, சிவராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், 41. இவர் மேளம் செய்து கொடுப்பதோடு, நிகழ்ச்சிகளுக்கு மேளம் அடிக்கவும் சென்று வந்துள்ளார். நேற்று மதியம், மேளம் வாங்குவது போல, முருகனின் வீட்டுக்கு ஆறு பேர் வந்தனர். வீட்டின் இரண்டாவது மாடியில் மேளம் செய்து கொண்டிருந்த முருகனை, அந்த கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த முருகனை, அக்கம்பக்கத்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் மரணமடைந்தார். கடந்த 2021ல் கொண்டித்தோப்பை சேர்ந்த முருகன்,35 என்பவர் கொலை செய்யப்பட்டார். இதற்கு, புளியந்தோப்பு முருகனும் அவரது தம்பி வேலுவும் பின்னணியில் இருந்துள்ளனர். இதனால், கொண்டித்தோப்பு முருகனின் ஆதரவாளர்கள், முருகனை பழிதீர்க்க காத்திருந்தனர். அதன்படி திட்டமிட்டு, புளியந்தோப்பு முருகனை கொன்று இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பேசின்பாலம் காவல்நிலைய போலீசார், வால்டாக்ஸ் சாலை பிரபா உள்ளிட்ட ஐவரை தேடி வருகின்றனர்.