உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது வாங்கிய சிறுவர்களை கண்டித்த நபருக்கு வெட்டு

மது வாங்கிய சிறுவர்களை கண்டித்த நபருக்கு வெட்டு

செம்பியம், திரு.வி.க., நகர், பல்லவன் சாலை கே.கே.ஆர்., அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் அமீர்கான், 39; விற்பனை பிரதிநிதி.இவர், நேற்று முன்தினம் இரவு, பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபானக் கடையில் மது அருந்தி விட்டு, வெளியே நின்றுள்ளார்.அப்போது, மூன்று சிறுவர்கள் மதுபானம் வாங்கி வந்துள்ளனர். அவர்களுக்கு, 'ஏன் இப்படி சிறு வயதில் மது அருந்துகிறீர்கள்' என, அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் மூவரும், அமீர்கானை கையால் சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில், அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது.அங்கிருந்தோர் அமீர்கானை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை