உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முன்விரோதம் காரணமாக வியாபாரிக்கு கத்தி வெட்டு

முன்விரோதம் காரணமாக வியாபாரிக்கு கத்தி வெட்டு

செங்குன்றம், செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி, பட்டுக்கோட்டை அழகிரி தெருவைச் சேர்ந்தவர் கோபி, 56; காய்கறி வியாபாரி.நேற்று முன்தினம் இரவு, கடை மூடும் நேரத்தில் வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் ஒருவர், கோபியிடம் 500 ரூபாய்க்கு சில்லறை கேட்டுள்ளார். அவர் இல்லையென கூறியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோபியின் தலை மற்றும் கை விரல்களில் வெட்டிவிட்டு தப்பியுள்ளார். அங்கிருந்தோர் கோபியை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது குறித்த புகாரின்படி, செங்குன்றம் போலீசார் விசாரித்தனர். இதில், முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை