உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடியில் 114 பேர் மீது குண்டாஸ்

ஆவடியில் 114 பேர் மீது குண்டாஸ்

ஆவடி, தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, ஜூலை மாதத்தில் மட்டும், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்த ஆண்டில், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் 68 பேர், கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் 15 பேர், போதைப்பொருள் வழக்கில் 24 பேர், கள்ளச்சந்தை வழக்கில் நான்கு பேர் மற்றும் இணையதள குற்ற வழக்குகளில் மூன்று பேர் என, 114 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ