உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / படிக்கட்டில் தொங்கியபடி தாளம் பள்ளி மாணவர்கள் ஆபத்து பயணம்

படிக்கட்டில் தொங்கியபடி தாளம் பள்ளி மாணவர்கள் ஆபத்து பயணம்

பூந்தமல்லி, பூந்தமல்லியில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பூந்தமல்லி, நசரத்பேட்டை, சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், மாங்காடு, குன்றத்துார் என, 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து, 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். பெரும்பாலானோர், அரசு பேருந்தில் பயணித்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதில் பூந்தமல்லி, போரூர், குன்றத்துார் வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்துகளில், பூந்தமல்லி அரசு பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு, ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.மேலும், பாட்டுப் பாடி பேருந்தில் தாளம் போடுவதால், பயணியர் அவதிப்படுகின்றனர். எனவே, பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்களுக்கு, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை