| ADDED : ஆக 18, 2024 12:24 AM
பெரம்பூர், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுஷித் கந்துல், 24. இவரது மனைவி மேபால் பூனியா, 20. நிறைமாத கர்ப்பிணியான மேபால் பூனியா, நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலம், ராவுர்கேலா செல்வதற்காக, பெரம்பூர் ரயில் நிலைய முதல் நடைமேடையில் உள்ள காத்திருப்பு அறையில் கணவருடன் காத்திருந்தார். அச்சமயம் கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ரயில் நிலையத்திலேயே பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.