உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாம்பன் சுவாமி கோவிலில் மயூர வாகன சேவன விழா 

பாம்பன் சுவாமி கோவிலில் மயூர வாகன சேவன விழா 

திருவான்மியூர், பாம்பன் சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் டிச., மாதம் மயூர வாகன சேவன இரண்டு நாள் விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஏராளமான அடியார்கள், பக்தர்கள் பங்கேற்பர்.மயூரநாதப் பெருமாளை பாடும் பணியை ஏற்று, 6,666 பாமாலைகள், சாத்திர, தோத்திர ஆராய்ச்சி நுால்கள் எழுதியவர், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்.அவர் சென்னையில் வாழ்ந்தபோது, விபத்து ஏற்பட்டு, கால் எலும்பு முறிந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், முருகன் அருளால் குணமடைந்தார்.அந்த நினைவை போற்றும் வகையில், சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றனர்.திருவான்மியூர், பாம்பன் சுவாமி கோவிலில் இரண்டு நாள் நடக்கும்விழாவில் முதல் நாள் மாலை குமரகுருதாசர் சன்னதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்படும். அதை தொடர்ந்து சோட சோபசார ஆராதனை திருப்புகழ், திருவீதி உலா நடக்கும். இதில், ஏராளமான அடியார்கள், பக்கதர்கள் பங்கேற்பர்.முதல் நாள் இரவில் இருந்து இரண்டாம் நாள் அதிகாலை வரை ஆறு கால பூஜை சண்முக சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்படுகிறது. காலை, குமரகுருதாச சுவாமிகள் பதிகங்கள் அகண்ட பாராயணம் நடத்தப்படுகிறது.அதை தொடர்ந்து அடியார்கள் தரிசனம், பதிகம் ஓதுதல், மகேஸ்வர பூஜையுடன் விழா நிறைவு பெறும். இரண்டாம் நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அன்று மட்டும், 4,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி