| ADDED : ஆக 16, 2024 12:34 AM
சென்னை, தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களிலும், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில் சேவையிலும், பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, சில மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சில விரைவு ரயில்கள் செங்கல்பட்டில் இருந்தும், விழுப்புரத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. சில வெளிமாநில விரைவு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி வழியாக, மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. எனவே, இந்த ரயில்களின் சேவை மாற்றங்கள் குறித்து, பயணியர் 044-25354995, 044-25354151 ஆகிய உதவி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.இந்த உதவி எண்கள் வரும் 18ம் தேதி வரை, 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருக்கும் என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.