உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடையாறு அருகே செத்து மிதந்த மீன்கள் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அடையாறு அருகே செத்து மிதந்த மீன்கள் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை, சென்னை, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா அருகே மீன்கள் செத்து மிதந்தது குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் உள்ள அடையாறு உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீர் கலக்காமல் துாய்மைப்படுத்த வேண்டும் என, கடந்த 2022ல் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், தமிழக அரசு துாய்மைப்படுத்தவில்லை. இந்நிலையில், சென்னை, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா அருகே, மீன்கள் செத்து மிதந்தன. கோட்டூர்புரம் அருகே பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நின்றதும், கோட்டூர்புரம் ரிவர் வியூ சாலையில் நகர்ப்புற வனப்பகுதி வழியாக செல்லும் கால்வாயில் கழிவுநீர் நிரம்பியதும் மீன்கள் இறப்புக்கு காரணம் என, கடந்த ஜூன் 16ம் தேதி செய்திகள் வெளியாயின.அதன் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்தனர்.'அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா அருகே மீன்கள் செத்து மிதப்பது குறித்து, தமிழக அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை