உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொசுவர்த்தி ஏற்றி துாங்கிய மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

கொசுவர்த்தி ஏற்றி துாங்கிய மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

ஆவடி, ஆவடி அடுத்த அண்ணனூர், புதிய அண்ணா நகரைச் சேர்ந்தவர் கமலா அம்மாள் மகன் வேல்முருகன், 45; வெல்டர். இவரின் 20வது வயதில் நோய் வாய்ப்பட்டு, கால்கள் செயலிழந்து மாற்றுத்திறனாளி ஆனார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், வீட்டில் உள்ள கட்டில் அருகே கொசுவர்த்தி ஏற்றி வைத்து துாங்கினார்.அப்போது, கொசுவர்த்தியில் இருந்து தீ போர்வையில் பட்டு, படுக்கை தீப்பிடித்து எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அதிகாலை வேல்முருகன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை