உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடுவழியில் நின்ற மாநகர பஸ் பயணியர் அவதி

நடுவழியில் நின்ற மாநகர பஸ் பயணியர் அவதி

திருவொற்றியூர், எண்ணுார் - வள்ளலார் நகர் நோக்கி சென்ற, தடம் எண்: 56 என்ற மாநகர பேருந்து, நேற்று மாலை, எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, திடீரென பழுதானது.பேருந்தின் 'சைலன்சர்' உடைந்து விழுந்து விட்டதால், மேற்கொண்டு இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. நடுவழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால், பயணியர் தவிப்பிற்கு ஆளாகினர்.தொடர்ந்து, பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டு, மாற்று பேருந்தில் பயணியர் ஏற்றி விடப்பட்டனர். தொடர்ந்து, ஓட்டுனர் சைலன்சரை கயிறால் கட்டி, அருகேயுள்ள தண்டையார்பேட்டை பணிமனைக்கு கொண்டு சென்றனர்.ஏற்கனவே, எண்ணுார் பேருந்து நிலையத்தில், தரமற்ற பேருந்துகள் இயக்கப்படுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் தான், எண்ணுார் - வள்ளலார் நகர் வரை இயக்கப்பட்ட இப்பேருந்து, சைலன்சர் பழுதாகி நடுவழியில் நின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை