உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேருந்து நிலைய பணிகளால் நிழற்குடையின்றி பயணியர் அவதி

பேருந்து நிலைய பணிகளால் நிழற்குடையின்றி பயணியர் அவதி

எண்ணுார், ஆக. 17-எண்ணுார் பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே, வள்ளலார் நகர், எழும்பூர், கோயம்பேடு உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு, தினசரி, 54 பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க திருவொற்றியூர் தி.மு.க., --எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 1.50 கோடி ரூபாயும், சென்னை மாநகராட்சி நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 1.29 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், பணிகள் துவங்கவில்லை. இதனால், எண்ணுார் மக்கள் நல சங்கம் சார்பில், பேருந்து நிலையத்தை சீரமைக்க கோரி அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்தார். அதன்படி, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக, பழைய பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் துவங்கின. இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்து சேவைகள், தற்போது பணி மனையில் இருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், பயணியருக்கான நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால், அவர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக முதியோர், கர்ப்பிணிகள், பள்ளி சிறார்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தற்காலிகமாக பயணிருக்கு நிழற்குடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி