உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு காப்பு

பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு காப்பு

ஆவடி, ஆவடி அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்தவர், 21 வயது பெண். இவருக்கு சமூக வலைதளம் வாயிலாக, சென்னை கேளம்பாக்கம், சர்ச் தெருவைச் சேர்ந்த பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங், 30, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.கடந்த 2022ல், மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து, திருநின்றவூரில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், அப்பெண்ணிடம் நகை, பணம் கேட்டு துன்புறுத்திய பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங், அவரைப் பிரிந்து, தன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால், இளம்பெண் அவரை தேடி வீட்டிற்கு சென்ற போது, பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் வேறு பெண்ணை திருமணம் செய்தது தெரிந்தது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி இளம்பெண் வீட்டிற்கு வந்த பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்த புகாரை விசாரித்த பட்டாபிராம் மகளிர் போலீசார், கேளம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்கை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை