உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாய்களையும் காப்பாற்றுங்கள்! பீட்டா வேண்டுகோள்

நாய்களையும் காப்பாற்றுங்கள்! பீட்டா வேண்டுகோள்

சென்னை:'வெப்பத்தின் தாக்கம், மனிதர்களை போலவே விலங்குகளையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக, தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அவைகளை காப்பாற்றுங்கள்' என, விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' வேண்டுகோள் விடுத்துள்ளது.அந்த அமைப்பு கூறியதாவது:மனிதர்களை போலவே நாய்களுக்கு பாதங்களின் வழியாகவே வியர்க்கும். மூச்சிரைத்து தான் அவை தங்களை குளிர்ச்சியாக்கி கொள்கின்றன. அதிகரிக்கும் வெப்பத்தால், வெப்ப அழுத்தமும், மூளை சேதம் உட்பட உடல் காயமும் ஏற்படலாம். இதனால் மரணமும் நேரும்.நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களில் உரிமையாளர்கள், நாய்களை விட்டு வைக்க வேண்டாம். காலநிலை 21 டிகிரி செல்ஷியஸ்நிலவும் நாட்களில் கூட, காருக்குள் 20 நிமிடங்களில் 37 டிகிரி வெப்பநிலை தொடும். அதேபோல, 32 டிகிரி செல்ஷியஸ்பதிவாகும் நாட்களில், வெப்பம் 42 டிகிரி தாண்டும். அதுவே, 40 டிகிரி செல்ஷியஸ்தாண்டும் போது நிலைமை விபரீதமாகும்.அதேபோல, கார் நேரடி சூரிய ஒளியில் இல்லாமல் இருந்தாலும் கூட, காருக்குள் சிக்கிய நாய்கள் வெப்பத்தால் இறந்து போகலாம்.வீடுகளுக்கு வெளியே மண் பாத்திரங்களில் தண்ணீர் வையுங்கள். ஜன்னல் ஓரம், பால்கனி, மேல்மாடி போன்ற இடங்களில் தண்ணீர் வைக்கவும்; அதை அடிக்கடி மாற்றவும்.வேலைகளில் ஈடுபடுத்தப்படும் மாடு, கழுதை, குதிரை போன்ற விலங்குகளுக்கு கட்டாயம் அவ்வப்போது ஓய்வு தேவை. அவ்வப்போது உடலில் தண்ணீரை தெளிக்க வேண்டும்.பழங்களையும் தரலாம். விலங்குகள் துன்பத்தில் இருந்தால், கால்நடை மருத்துவர் அல்லது விலங்குகள் நல அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள். தேவைப்பட்டால், 98201 22602 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். உதவி வரும் வரை பாதிக்கப்பட்ட விலங்குகளின் அருகிலேயே இருக்கவும்.இவ்வாறு பீட்டா கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

KRISHNAN R
ஏப் 28, 2024 22:22

ஜீவகாருண்யம் வரவேற்க வேண்டிய ஒன்று தெரு நாய்கள் மனிதனுக்கு ஏற்படும் கடிகளை என்ன செய்வது நீதி மன்றம் தீர்ப்புகள் அமல் படுத்த வேண்டும் கருத்தடை செய்வதில் யாரும் அக்கறை காட்டவில்லை இந்த அமைப்பு மனிதருக்கும் குரல் கொடுக்க வேண்டும்


சரவணகுமார்
ஏப் 28, 2024 21:37

இந்த தெரு நாய்களால் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பது தெரியுமா அவர்களை காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுப்பார்கள்


மேலும் செய்திகள்