உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவ - மாணவியர் வருகையால் புத்துயிர் பெற்ற பள்ளிகள்

மாணவ - மாணவியர் வருகையால் புத்துயிர் பெற்ற பள்ளிகள்

சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. புதிய கல்வியாண்டு துவங்குவதற்கு முன்பே, சென்னையில் பள்ளிகளில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யும் படி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தது.இதன்படி, பள்ளிகளில் அனைத்து பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு சிறப்பாக முடிந்த நிலையில், இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.முதல் நாளில் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க, பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாணவ - மாணவியரும் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள், கடந்த சில நாட்களாக சென்னைக்கு திரும்பியபடி உள்ளனர். இவர்கள் கார், பேருந்து, பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்னைக்கு வருவதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அதுமட்டுமல்லாமல், பள்ளிகள் திறப்பை அடுத்து, சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் 'பீக் ஹவர்'களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போக்குவரத்து போலீசார் தீவிரமாக பணியாற்றினர்.திருவொற்றியூர், தி.நகர், குரோம்பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலை 8:00 - 9:00 மணி இடைவெளியில், ஒரே நேரத்தில், அதிக அளவிலான வாகனங்கள் வந்ததால், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கின. 20 நிமிடங்களுக்கு மேலாக, வாகனங்கள் நகர முடியாமல், மக்கள் தவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை