உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சங்கர விஜயம் திருவிழாவில் ஆன்மிகவாதிகள் சொற்பொழிவு 

சங்கர விஜயம் திருவிழாவில் ஆன்மிகவாதிகள் சொற்பொழிவு 

சென்னை, சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சுவாமிகளின் சன்யாச ஆஸ்ரம பொன்விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில், சங்கர விஜயம் திருவிழா கடந்த, 7ம் தேதி முதல் நடந்து வருகிறது.துவக்க நாள் விழாவில், சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதி தீர்த்த சுவாமிகள் காணொலி வாயிலாக அருளாசி வழங்கியதாவது:பாரதீ தீர்த்த மகா சுவாமிகள், 50 ஆண்டுகளுக்கு முன் சன்னியாசம் பெற்றார். பின், நாடு முழுதும் பயணித்து, தர்மத்தை உபதேசம் செய்துள்ளார். அவர், சனாதன தர்மத்தை மக்களுக்கு போதித்து வருகிறார். நம் குருநாதரின், 50வது ஆண்டு சன்னியாசத்தை முன்னிட்டு, சுவர்ண பாரதி மகோற்சவம் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. சனாதனம் ஹிந்து தர்மம் இரண்டு விஷயங்களை அழுத்தமாக சொல்கிறது. ஒன்று பகவானை ஆராதிக்க வேண்டும். மற்றொன்று அனைவருக்கும் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு அருளாசி வழங்கினார்.தினம் நடக்கும் சொற்பொழிவு நிகழ்வில் இன்று, நெரூர் வித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகளின், 'ஆதிசங்கரரும் நிலையான ஆனந்தமும்' எனும் பெயரில் சொற்பொழிவாற்றுகிறார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வித்யா தீர்த்த பவுண்டேஷன் அமைப்பினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை