உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துவங்கியது பேருந்து நிலைய கட்டுமானம் இனி டிப்போவில் இருந்து பஸ்கள் இயக்கம்

துவங்கியது பேருந்து நிலைய கட்டுமானம் இனி டிப்போவில் இருந்து பஸ்கள் இயக்கம்

எண்ணுார், எண்ணுார் பேருந்து நிலையம் சேதமடைந்து, பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இது குறித்த புகார்களை அடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதி 1.50 கோடி ரூபாய், சென்னை மாநகராட்சி 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 1.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டுமான பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், பணிகள் துவங்கப்படவில்லை.இந்த நிலையில், எண்ணுார் மக்கள் நலச்சங்கம் சார்பில், சில தினங்களுக்கு முன் கத்திவாக்கம் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் உள்ளிட்டோர், பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.இதையடுத்து, பணிகளை முடுக்கி விட்டனர், ஒருவழியாக பழைய பேருந்து நிலையத்தை இடித்து அகற்றும் பணி, மும்முரமாக நடக்கிறது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கட்டுமான பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடித்து, புது பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்; அதுவரையில், அருகே உள்ள எண்ணுார் பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Selvam Selvam
ஆக 08, 2024 17:54

மக்களுக்கு நல்லது நடந்தால் sari.


SRIDHAR
ஆக 07, 2024 17:59

எல்லாமே இப்படித்தான்


Raja Abraham Raj
ஆக 06, 2024 14:56

Romba நல்ல நியூஸ்


S Murali
ஆக 06, 2024 12:18

நல்லதுசீக்கிரமாக மக்கள் பயன் பாட்டில் வர வேண்டும்.


Yasararafath
ஆக 05, 2024 11:33

சூப்பர்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ