உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை விற்ற மூவர் கைது

போதை மாத்திரை விற்ற மூவர் கைது

கோயம்பேடு, நெற்குன்றம் கேட்டுக்குப்பம், தனலட்சுமி நகர் முதல் பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த, விருகம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ராஜன், 18, ஆழ்வார்திருநகர் பெரியார் நகரை சேர்ந்த மணிகண்டன், 21 மற்றும் ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை மடக்கி விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை சோதனை செய்த போது, அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த கோயம்பேடு போலீசார், 99 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை