உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தரமணியில் போக்குவரத்து மாற்றம்

தரமணியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில், மெட்ரோ ரயில் பாதை பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும், 30ம் தேதி முதல், ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றப்பட உள்ளது. இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள், வேளச்சேரி நோக்கி எஸ்.ஆர்.பி., சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது.மாற்றாக ஒய்.எம்.சி.ஏ., முன், புதிதாக போடப்பட்டுள்ள யு - டர்னில் சென்று, எஸ்.ஆர்.பி., சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி செல்லலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ