உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெளிநாட்டு டாக்டர்களுக்கு அப்பல்லோவில் பயிற்சி 

வெளிநாட்டு டாக்டர்களுக்கு அப்பல்லோவில் பயிற்சி 

சென்னை, சர்வதேச புற்றுநோய் டாக்டர்களுக்கு புரோட்டான் பீம் தெரபி சிகிச்சைகள் குறித்த பயிற்சிகளை, பெல்ஜியத்தின் ஐயன் பீம் அப்ளிகேஷன் என்ற நிறுவனத்துடன் இணைந்து வழங்க அப்பல்லோ மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது.அதன்படி, வியட்நாம், இந்தோனேசியா நாடுகளை சேர்ந்த டாக்டர்களுக்கு, அப்பல்லோவில் பயிற்சி திட்டம் நேற்று துவங்கியது.இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவ குழும துணை தலைவர் பிரீத்தா ரெட்டி கூறியதாவது:தெற்காசிய அளவில், அப்பல்லோ மருத்துவமனை முதன் முதலாக இச்சிகிச்சை முறையை அறிமுகம் செய்தது. இது அதிகம் பலனளிக்கிற, துல்லியமான சிகிச்சையாக உருவெடுத்திருக்கிறது. 10 மாத குழந்தை உட்பட 1,400க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளுக்கு புரோட்டான் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.மேம்பட்ட பயிற்சி மற்றும் கல்வி திட்டத்தின் வாயிலாக புரோட்டான் தெரபி நிபுணத்துவத்தை மேலும் பரவலாக்கும் நோக்கில் பயிற்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த டாக்டர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை