உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தென் சென்னை தொகுதியில் அ.தி.மு.க.,வினரிடம் சலசலப்பு

தென் சென்னை தொகுதியில் அ.தி.மு.க.,வினரிடம் சலசலப்பு

தென்சென்னை அ.தி.மு.க., வேட்பாளரான ஜெயவர்தன், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகன். இத்தொகுதி பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா நியமிக்கப்பட்டு, கட்சி பணிகளை கவனித்து வந்தார். இவர், பிரசாரத்தில் கூட்டணி கட்சியினரிடமும், அ.தி.மு.க., நிர்வாகிகளிடமும் அனுசரித்து செல்வதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:யாதவ சமூகத்தினரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வைத்தே தேர்தல் பணியில் ஈடுபட்டார்.ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தன் சமூகத்தைச் சேர்ந்த விசுவாசமான நபர்களை வைத்து பிரசாரம், பணம் வழங்குவது உள்ளிட்ட வேலைகளை செய்தார். மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பணிக்கு வந்தபோது, அவர்களை ஒதுக்கினார்.அதேபோல், தென் சென்னை அ.தி.மு.க., வேட்பாளர் தரப்பில் மயிலாப்பூர், அடையாறு சட்டசபை தொகுதிகளில் 'பூத்' முகவர்களுக்கு செலவு செய்வதற்காக எடுத்து செல்லப்பட்ட 33 லட்சம் ரூபாய், தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கியது.இதனால், அப்பகுதிகளில் பணம் வழங்குவது தடைபட்டுள்ளது. இதில் அதிருப்தியடைந்த வேட்பாளர் தரப்பில், 'என் கையில் இருந்து பணம் வழங்கப்பட்டு விட்டது. பணத்தை பெறும் பொறுப்பாளர் யாரோ அவர்தான் இந்த தொகையை ஈடு செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த தொகையை ஈடுசெய்யும் வகையில் பூத் முகவர்கள் செலவு உள்ளிட்டவற்றுக்கு, அள்ளி கொடுக்காமல் பொறுப்பாளர் கிள்ளியே தருவதாலும், கட்சியில் அதிருப்தி நிலவுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.-- நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி