உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குஅக்., 27ம் தேதி வரும் ரயில்கள் "ஹவுஸ் புல்

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குஅக்., 27ம் தேதி வரும் ரயில்கள் "ஹவுஸ் புல்

சென்னை:மதுரை, நெல்லை, தூத்துக்குடி உட்பட, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு, தீபாவளிக்கு மறுநாள் அக்., 27ம் தேதி இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.அக்., 26ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கியதும், அனைத்து சீட்டுகளும் நிரம்பி விட்டன. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை உட்பட, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களிலும், சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களிலும், அக்., 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை முன்பதிவு முடிந்து விட்டது.இந்த நிலையில், அக்., 26ம் தேதி சென்னைக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டன. தீபாவளிக்கு மறுநாள் அக்., 27ம் தேதி சென்னைக்கு புறப்படும் அனைத்து தென் மாவட்ட ரயில்களிலும், முன்பதிவு துவங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்து விட்டது.பாண்டியன் எக்ஸ்பிரசில் 301, நெல்லை எக்ஸ்பிரசில் 182 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். கன்னியாகுமரி, முத்துநகர் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் இடமில்லை.சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?இக்கால கட்டத்தில், சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்துள்ளது.இது குறித்து, சென்னை கோட்ட மேலாளர் அனந்தராமனிடம் கேட்டபோது, 'பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் சமயத்தில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளி சமயத்தில், பயணிகள், மக்கள் கூட்டம் அதிகம் இருந்தால், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்து, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முடிவு செய்து அறிவிக்கும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை