உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டாஸ்மாக் கடையில் தகராறு நடத்துனர் குத்திக் கொலை

டாஸ்மாக் கடையில் தகராறு நடத்துனர் குத்திக் கொலை

வியாசர்பாடி, அம்பத்துார், அருந்ததிபாளையம், புதுகோவில் தெருவைச் சேர்ந்தவர் பிஜூ, 35; வியாசர்பாடி பேருந்து பணிமனையில், நடத்துனராக பணிபுரிந்தார். இவர் நேற்று மாலை, மாதவரம் மில்க் காலனி சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் இருந்த போது, அங்கு வந்த இருவர் தகராறு செய்துள்ளனர்.அப்போது, மதுபோதையில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் மர்ம நபர்கள், பிஜூவை கத்தியால் மார்பில் இரு இடங்களில் குத்திவிட்டு தப்பினர்.ரத்த வெள்ளத்தில் சரிந்த பிஜூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பிச் சென்ற மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி