உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஆவடி மாநகராட்சியில் ரூ.42 கோடி வரி வசூல்

 ஆவடி மாநகராட்சியில் ரூ.42 கோடி வரி வசூல்

ஆவடி: ஆவடி மாநகராட்சி, நான்கு மண்டலங்கள், 48 வார்டுகளில், 92,300 பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக மாநகராட்சிக்கு, ஆண்டுதோறும் 81.60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய், மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்படுகிறது. இந்நிலையில், 2025 - 26ம் நிதி ஆண்டில் 40 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என, ஆவடி மாநகராட்சி இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. அந்த இலக்கை, முதல் அரையாண்டிலேயே, வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் அரை ஆண்டுக்கான வரி வசூல், கடந்த மாதம் துவங்கியது. அதன்படி, கடந்த அக்., 1ம் தேதி முதல் நேற்று வரை, 2 கோடி ரூபாய் வரி வசூல் செய்துள்ளது. வருவாய்த்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், ஜனவரி முதல் நவம்பர் வரை, இலக்கை தாண்டி மொத்தமாக, 42 கோடி ரூபாய் வரி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ