உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு தம்பி கைது; அண்ணன் தலைமறைவு

 ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு தம்பி கைது; அண்ணன் தலைமறைவு

சைதாப்பேட்டை: சொத்தின் உரிமையாளர் போல் ஆள் மாறாட்டம் செய்து, 57 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த சகோதரர்களில் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். மேற்கு சைதாப்பேட்டை, கொத்தவால்சாவடி தெருவை சேர்ந்தவர் பார்த்தீபன், 33; சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இவர், கடந்த 2020ம் ஆண்டு, காலிமனை வாங்க முயன்றபோது, பாலவாக்கத்தை சேர்ந்த அப்துல்ஹக், 52, எனும் புரோக்கர் அறிமுகமானார். பள்ளிக்கரணை, வி.ஜி.பி., சாந்தி நகரில், 2430 சதுர அடி காலிமனை உள்ளதாக கூறிய அப்துல்ஹக், அந்த இடத்தின் உரிமையாளர் நாராயணமூர்த்தி, தன் சகோதரர் அப்துல்ஹாதி, 53,க்கு, 'பவர் ஆப் அட்டர்னி' கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து, பார்த்தீபனுடன் ஒப்பந்தம் செய்த அப்துல்ஹாதி, அந்த இடத்தை தென்சென்னை சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். அதற்காக, 57 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், நிலத்தின் உரிமையாளர் நாராயணமூர்த்தி பெயரில், சகோதரர்கள் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்தது பார்த்தீபனுக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அப்துல்ஹக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அப்துல்ஹாதியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை