உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிறுத்தத்தில் கழிவுநீர் தேக்கம் பேருந்து பயணியர் அவதி

நிறுத்தத்தில் கழிவுநீர் தேக்கம் பேருந்து பயணியர் அவதி

துரைப்பாக்கம் பகுதியில், பள்ளி, கல்லுாரி, ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. ஜெயின் கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில், அதிக மக்கள் பேருந்துக்காக காத்திருப்பர்.இந்த நிறுத்தத்தை ஒட்டி, பல மாதங்களாக கழிவுநீர் தேங்குகிறது. அதுவும், ஹோட்டல்கள், விடுதிகளின் சமையல் கூடத்தில் உள்ள கழிவுநீரை குழாய் வழியாக, அணுகு சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் விட்டுள்ளனர்.வடிகால் நிரம்பி, பேருந்து நிறுத்தத்தை ஒட்டிய பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சுவாச பிரச்னையால் பயணியர் சிரமப்படுகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.வெங்கட்ராமன், 65, துரைப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி