உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்னை வீரர் சாரதி வாள்வீச்சில் வெண்கலம்

 சென்னை வீரர் சாரதி வாள்வீச்சில் வெண்கலம்

சென்னை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேசிய வாள்வீச்சு போட்டியில், சென்னை வீரர் சாரதி, வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 69வது தேசிய வாள்வீச்சு போட்டி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது. இதில், நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் போட்டியிட்டனர். தமிழகம் சார்பில் 12 ஆண்கள், 12 பெண்கள் என 24 பேர் பங்கேற்றனர். இதன் இறுதிப் போட்டிகள், நேற்று முன்தினம் நடந்தன. ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த சாரதி, 15 வயது சிறுவன், வெண்கலப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார். தொடர்ந்து நடந்த ஆடவருக்கான குழு போட்டியிலும், தமிழக அணி, தன் சிறப்பான ஆட்டத்தால் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளது. தமிழக அணியில் சென்னையின் திருக்குமரன், 17, கன்னியாகுமரியின் நிபின், 17, அகிலேஷ், 15, நாமக்கல்லின் சர்மா, 15, ஆகியோர் இடம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை