| ADDED : ஜன 26, 2024 12:31 AM
தேனாம்பேட்டை, தைப்பூச திருநாளையொட்டி, தேனாம்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில், தமிழக கவர்னர் ரவி, தன் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. தைப்பூச திருநாளான நேற்று, இந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, கவர்னர் ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் வந்தனர். பின், பக்தர்களுடன் சேர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.அப்போது அவர், தேச முன்னேற்றம் மற்றும் வளத்திற்காக வேண்டிக் கொண்டார்.