உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அரசு நிலத்தில் கட்டப்பட்ட 2 மாடி கட்டடம் இடிப்பு

 அரசு நிலத்தில் கட்டப்பட்ட 2 மாடி கட்டடம் இடிப்பு

நெற்குன்றம்: அரசு நிலத்தில் கட்டப்பட் டிருந்த இரண்டு மாடி கட்டடம், நீதிமன்ற உத்தரவை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கும் பணியை துவக்கினர். வளசரவாக்கம் மண்டலம், 145வது வார்டு நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவில் வீட்டு வசதி வாரிய நிலம் உள்ளது. இந்த நிலத்தில், நெற்குன்றத்தைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர், இரண்டு மாடி கட்டடம் கட்டினார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கட்டப்பட்ட கட்டடம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. நீதிமன்ற உத்தர வின்படி, அக்கட்டடத்திற்கு வீட்டு வசதி வாரியம் 'சீல்' வைத்தது. இந்நிலையில், அந்த கட்டடம் இடிக்கப்படாமல் இருந்தது. அதன்படி, தொடரப்பட்ட நீதிமன்ற அவமதி ப்பு வழக்கில், கட்டடத்தை இடிக்க மாநராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் 'பொக்லைன்' இயந்திரத்தின் உதவியுடன், அக்கட்டடத்தை இடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி