உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருட்களுடன் பட்டதாரி வாலிபர் கைது

போதை பொருட்களுடன் பட்டதாரி வாலிபர் கைது

ஓட்டேரி, கே.கே.நகர், ராணி அண்ணாநகரைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 27. பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் 'சேல்ஸ்மேன்' வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளனர். ஓட்டேரி, பனந்தோப்பு ரயில்வே காலனி மைதானம் அருகே சந்தேகப்படும்படி இருந்ததால், போலீசார் இவரை சோதனை செய்தனர். இவர் வைத்திருந்த பார்சலில், 286 'கூல் லிப்' போதைப்பொருள் இருந்தது. இதையடுத்து, பிரவீன்குமாரை ஓட்டேரி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி