உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டி முடித்து 3 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படாத வீடுகள்

கட்டி முடித்து 3 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படாத வீடுகள்

ராயபுரம், ராயபுரம், கரிமேடு காலனியில், 9 கோடி ரூபாயில், 5 மாடிகள் கொண்ட நகர்ப்புற வாழ்விட குடியிருப்புகள் கட்டப்பட்டு மூன்றாண்டுகள் ஆகியும், பயனாளிகளிடம் ஒப்படைக்காததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.ராயபுரம், கரிமேடு காலனியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், 50 ஆண்டுகளுக்கு முன், 54 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.பழுதான இந்த கட்டடத்தில் பெரும்பாலான இடங்களில், கூரை விரிசல் விழுந்து அபாய நிலையில் காட்சியளித்தது. இதையடுத்து, இடியும் நிலையில் இருந்த இந்த கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்தது.இதையடுத்து, கடந்த 2019ல், இந்த பழைய வீடுகள் இடிக்கப்பட்டன. கடந்த 2019ல் புதிதாக, 9 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் தரைதளம், வாகன நிறுத்துமிடம் வசதியுடன், 5 மாடிகளில், 70 வீடுகள் கட்டும் பணி நடந்தது. இதில் மின்துாக்கி, தெருவிளக்குகள், மழைநீர் சேகரிப்பு திட்டம், சிமென்ட் சாலை, தீயணைப்பான் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.இக்கட்டடம் முழுதும் செங்கல் இல்லாமல், கான்கிரீட்டால் கட்டப்பட்டது. மின்துாக்கி, டைல்ஸ், 'வெஸ்டர்ன்' கழிப்பறை வசதியுடன், ஒரு வீடு 402 சதுரடியில் அமைந்துள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் 2020ல் முடிவடைந்த நிலையில், மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் அந்த வீடுகள், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளன. இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, மின்துாக்கி உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. மின் வசதி பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. இந்த கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். வரும் பொங்கலுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ