உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோட்டூர் பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம் கோலாகலம்

கோட்டூர் பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம் கோலாகலம்

சென்னை, கோட்டூர், பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ளது, அலர்மேல்மங்கை தாயார் உடனுறை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பிரசன்ன வெங்கடேஷ்வரர், அமர்மேல் மங்கை தாயார், ஆண்டாள், சுதர்சன நரசிம்மர், வேணுகோபாலன், கருடாழ்வார், பக்த ஆஞ்சயேர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.இக்கோவிலில் துவதஸ்தம்பம் எனும் கொடிமரம், மடப்பள்ளி, மதில் சுவர் புனரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா சம்ரோக்ஷணம் நேற்று நடந்தது.சம்ப்ரோக்ஷண நாளான நேற்று அதிகாலை 5:00 மணி முதல் விஸ்வரூப தரிசனம், கோபூஜை, கும்பாராதனம், நான்காம் கால யாக பூஜை நடந்தது. காலை 7:00 மணிக்கு மகாபூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடப்புறப்பாடு நடந்தது.நேற்று காலை 9:40 மணிக்கு ஆலய விமான துவஜஸ்தம்ப ஜீர்ணோதாரண அஷ்டபந்த மகா சம்ரோக்ஷணம் நடந்தது. பின், விசேஷ ஆராதனை, பிரம்மகோஷம், சாற்று மறை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை