உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை தட்டாங்குளத்தினர் அறிவிப்பு?

தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை தட்டாங்குளத்தினர் அறிவிப்பு?

சூளை, -ஹிந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து, சூளையில் இன்று கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை, பாரத் இந்து முன்னணியினர் மேற்கொள்ள உள்ளனர்.இதுகுறித்து, பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் ஆர்.டி.பிரபு மற்றும் தட்டாங்குளம் பகுதி வீட்டு உரிமையாளர்கள் சங்க தலைவர் பெருமாள் கூறியுள்ளதாவது:'சூளை, தட்டாங்குளம் பகுதி முழுதும், அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தம்' என, ஹிந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு ஆதாரமும் இன்றி கூறி வருகிறது.மணிகண்டனின் வீட்டையும், கடையையும் 'சீல்' வைத்துள்ளனர். போலியாக ஆதாரங்களை தயார் செய்து உள்ளனர். அரசும், அரசு இயந்திரமும் மக்களுக்காக தான்.வேலியே பயிரை மேய்ந்ததை போன்று ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அமைந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டுமே வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். அதன் பின் மறந்து விடுகின்றனர். இதனால், வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் ஓட்டு போடப்போவதில்லை. தட்டாங்குளம் பகுதி முழுதும் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, தி.மு.க. அரசுக்கு எதிராக போராட உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை