உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதுப்பட்டினம் கவுன்சிலர் மோசடி வழக்கில் கைது

புதுப்பட்டினம் கவுன்சிலர் மோசடி வழக்கில் கைது

புதுப்பட்டினம்,அணுசக்தி துறையில் வேலை பெற்று தருவதாக கூறி, 6 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக, வி.சி., கட்சியைச் சேர்ந்த புதுப்பட்டினம் கவுன்சிலரை, போலீசார் கைது செய்தனர்.கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம், பல்லவன் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். பெரியார் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தராஜ்.இவர்கள் இருவருக்கும், அணுசக்தி துறையின் போக்குவரத்து பிரிவில் வேலை பெற்று தருவதாக கூறி, புதுப்பட்டினம் ஊராட்சி, 11வது வார்டு உறுப்பினரான வி.சி., கட்சி பிரமுகரான தென்றல் கோபி என்கிற ஜெயகோபி என்பவர், 6 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.ஆனால், வேலை வாங்கித்தராமலும், பணத்தை திரும்ப ஒப்படைக்காமலும் இழுத்தடித்துள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது, இருவரையும் மிரட்டியுள்ளார்.இதுகுறித்து, அவர்கள் கல்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், நேற்று முன்தினம் தென்றல் கோபியை கைது செய்து, மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை