உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓய்வு பெற்ற டி.ஜி.பி. மனைவியிடம் மோசடி

ஓய்வு பெற்ற டி.ஜி.பி. மனைவியிடம் மோசடி

நொளம்பூர்:சென்னை, முகப்பேர் மேற்கு, நொளம்பூர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராணி மகேந்திரன். ஓய்வு பெற்ற டி.ஜி.பி.,யின் மனைவியான இவரது மொபைல் போனுக்கு, அண்மையில் குறுந்தகவல் ஒன்று வந்தது.அதில், நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து 'ரிவார்டு' வந்துள்ளது. இந்த லிங்கை 'கிளிக்' செய்து, அது கேட்கும் தகவல்களை பதிவிட்டால், பணம் மற்றும் பரிசு பொருட்கள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.இதை உண்மை என நம்பிய ராணி, குறிப்பிட்ட லிங்கை திறந்து, தகவல்கள் மற்றும் ரகசிய எண்ணையும் பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 5,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.இதுகுறித்து ராணி அளித்த புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை