உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ.1.80 கோடி தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்

 ரூ.1.80 கோடி தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு, நேற்று முன்தினம் இரவு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் உடைமைகளை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், சுற்றுலா சென்று சென்னை திரும்பியது தெரியவந்தது. அவரது உடைமைகளை பிரித்து சோதனை செய்த போது, எதுவும் சிக்கவில்லை. சந்தேகமடைந்த அதிகாரிகள், தனி அறைக்கு அவரை அழைத்து சென்று சோதித்து பார்த்ததில், அவரின் உள்ளாடைகளுக்குள் மறைத்து தங்கக்கட்டிகள் கடத்தியது தெரியவந்தது.அவை, 1.6 கிலோ எடையில் இருந்தன. அதன் மதிப்பு, 1.80 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்து, அதிகாரிகள் மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை