உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூன்று துறைகள் அலட்சியத்தால் ஓ.எம்.ஆரில் வடிந்தோடும் கழிவுநீர்

மூன்று துறைகள் அலட்சியத்தால் ஓ.எம்.ஆரில் வடிந்தோடும் கழிவுநீர்

துரைப்பாக்கம்,ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதனால், பெருங்குடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில், சாலைகள் குறுகலாக மாறியுள்ளன. சில சந்திப்புகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.இதில், பெருங்குடி சந்திப்பு மூன்று வழி பாதையாக உள்ளது. இந்த சந்திப்பில், வாகனங்கள் செல்லும் பாதையில், மெட்ரோ ரயில் துாண்கள் அமைப்பதால், பாதை குறுகலாகி உள்ளது.இதனால், மூன்று திசையிலும் நெரிசல் அதிகரிக்கிறது. இந்த சந்திப்பு தாழ்வாக உள்ளதால், இயந்திர நுழைவு வாயில் பாதையில் இருந்து கழிவுநீர் வெளியேறி, அங்கு தேங்குகிறது.இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. இந்த சந்திப்பு பகுதி, சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது. ஒரு வாரம் ஆகியும், மூன்று துறைகளும் கண்டுகொள்ளாததால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.ஐ.டி., நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதி என்பதால், வேலைக்கு செல்வோர் முகம் சுளிக்கும் வகையில் சாலை உள்ளது. கழிவுநீர் குழாய் அடைப்பை சரி செய்து, சாலையை சுத்தகமாக வைத்திருக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ