| ADDED : நவ 24, 2025 02:33 AM
பூக்கடை: மொபைல் போன் திருட்டு வழக்கில், கடைக்காரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, பார்க் டவுன், தஞ்சை முருகப்பா தெருவைச் சேர்ந்தவர் ஜார்ஜ், 53; ஸ்டீல் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டை திறந்து வைத்து துாங்கினார். அப்போது, வீட்டினுள் புகுந்த மர்ம நபர், மொபைல் போனை திருடினார். சத்தம் கேட்டு எழுந்த ஜார்ஜ், திருடனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விஜய், 24, என்பவரை கைது செய்தனர். இவர், மொபைல் போன் கடை நடத்தி வரும், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த முபாரக், 23, என்பவரிடம், திருட்டு மொபைல் போன்களை விற்று, செலவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, முபாரக்கை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து எட்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.