உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்பிக், கிரீன்ஸ்டார் நிறுவனம் வேளாண் சேவையில் புதுமை

ஸ்பிக், கிரீன்ஸ்டார் நிறுவனம் வேளாண் சேவையில் புதுமை

சென்னை, 'ஸ்பிக்' மற்றும் 'கிரீன்ஸ்டார்' உர நிறுவனங்களின் தலைமை அலுவலகமான, சென்னை கிண்டியில் உள்ள, 'ஸ்பிக் ஹவுசில்' வேளாண் சேவை ஊர்தி துவக்க விழா நடந்தது.இந்நிறுவனங்களின் விரிவுபடுத்தப்பட்ட பல்வேறு வேளாண் சேவைகளை விவசாயிகளிடம் காட்சிப்படுத்தவும், புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், காணொலி திரையுடன் வேளாண் சேவை ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த ஊர்தியை, நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குனர் எஸ்.நாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் பல்வேறு துறைகளின் தலைமை நிர்வாகிகள், அதிகாரிகள், விற்பனை பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.மேலும், ஆறு வாகனங்கள் வேளாண் சேவைகளுக்காக விரைவில் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி