உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் மாநகராட்சி மண்டபம் பராமரிப்பின்றி பரிதாப நிலை

தாம்பரம் மாநகராட்சி மண்டபம் பராமரிப்பின்றி பரிதாப நிலை

தாம்பரம், தனியார் திருமண மண்டபங்களுக்கு நிகராக இருந்த, தாம்பரம் அம்பேத்கர் திருமண மண்டபம், அதிகாரிகளின் அலட்சியத்தால், போதிய வசதிகள் இன்றி, பரிதாப நிலைமைக்கு வந்துவிட்டது. 60,000 ரூபாய் வாடகை கொடுத்து, வெளியில் இருந்து பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.தாம்பரம் மாநகராட்சி சார்பில் காவல் நிலையத்தை ஒட்டி, 40 ஆண்டுகளுக்கு முன், அம்பேத்கர் திருமண மண்டபம் கட்டப்பட்டது. அப்போது, ஓட்டு கட்டடத்தில் இயங்கியது. குறைந்த கட்டணம் என்பதால், பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடத்தி, மக்கள் பயனடைந்தனர். அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள், விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் கூட நடந்தன.இம்மண்டபத்தை தனியார் திருமண மண்டபங்களுக்கு நிகராக மேம்படுத்த கோரிக்கை எழுந்தது. 2015ல், 2 கோடி ரூபாய் செலவில், மண்டபம் மேம்படுத்தப்பட்டது. உயர்ரக மின்விளக்கு, 12 குளியலறையுடன் கூடிய கழிப்பறை, வாகன நிறுத்தம் வசதி, மணமக்கள் உள்ளிட்டோருக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய ஐந்து அறைகள், அலங்காரத்துடன் கூடிய மணமேடை, ஒரே நேரத்தில் 150 பேர் அமர்ந்து உணவு அருந்தும் அறை, சமையலறை, நுழைவாயில் வளைவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தனியார் திருமண மண்டபங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட இம்மண்டபத்திற்கு, 60,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. தனியார் மண்டபங்களுக்கு சென்றால், 2 லட்சம் ரூபாய் வரை கட்டணம் என்பதால், அம்பேத்கர் மண்டபத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. தேதிக்காக காத்திருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் சூழலும் ஏற்பட்டது. முந்தைய ஆட்சியின் போதும் அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கு பிறகும், இம்மண்டபத்தை முறையாக பராமரிக்காமல் விட்டதால், தற்போது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மண்டபத்தில் 600 இருக்கைகள் இருந்த இடத்தில், தற்போது 100 இருக்கைகளே உள்ளன. விளக்குகள் முறையாக எரியவில்லை. மின்விசிறிகள் ஓடவில்லை. மணமகன், மணமகள் அறைகளில் சேதமடைந்த பொருட்கள் உள்ளன. 'ஏசி' இயங்கவில்லை.தற்போதைய நிலை தெரியாமல் நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்தவர்கள், வெளியில் இருந்து பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னையில், மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, அம்பேத்கர் திருமண மண்டபத்தை புதுப்பித்து, மீண்டும் பழைய நிலைமை போல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாம்பரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி