உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மெட்ரோ வழித்தட பணியில் கிரேனில் சிக்கிய வாலிபர் பலி

 மெட்ரோ வழித்தட பணியில் கிரேனில் சிக்கிய வாலிபர் பலி

கண்ணகி நகர்: ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் வழித்தட பணியில், கிரேனை பின்னோக்கி இயக்கிய போது, பணி செய்து கொண்டிருந்த வாலிபர், அதில் சிக்கி பலியானார். ஓ.எம்.ஆரில் நடைபெறும் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணியை, 'எல் அண்ட் டி' என்ற தனியார் நிறுவனம் செய்து வருகிறது. நேற்று அதிகாலை, ஒக்கியம்பேட்டை, பி.டி.சி., பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பணியில், உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நசீப், 36, என்பவர் கிரேன் இயக்கி கொண்டிருந்தார். அப்போது, அவர் கிரேனை பின்னோக்கி நகர்த்தி சென்றபோது, அங்கு பணி செய்து கொண்டிருந்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த அமர்ஜித் குமார், 33, என்பவர், கிரேனில் சிக்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து, நசீப்பிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை