கோவை;கோவை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 40 ஆயிரத்து, 329 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.சமச்சீர் கல்வி முறையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (26ம் தேதி) துவங்கி, ஏப்., 8ம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை வருவாய் மாவட்டத்தில், 19 ஆயிரத்து, 995 மாணவர்கள், 20 ஆயிரத்து, 334 மாணவியர் என, 40 ஆயிரத்து, 329 மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.இதில், 742 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடக்கம். மேலும், 1,099 மாணவர்கள், 487 மாணவியர், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என, 1,587 பேர் தனித்தேர்வர்களாக எழுத உள்ளனர்.மொத்தம், 158 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்க, 11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இம்மையங்களில் இருந்து ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் எடுத்துச் செல்ல, 46 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என, 2,860 அலுவலர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளதாக, கோவை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.