உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 49 சவரன் தங்க நகை கையாடல்: கிளை மேலாளரிடம் விசாரணை

49 சவரன் தங்க நகை கையாடல்: கிளை மேலாளரிடம் விசாரணை

கோவை : தனியார் நிதி நிறுவனத்தில், 49 சவரன் தங்க நகை கையாடல் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.சேவூர், மணியகார தோட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்,29. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மண்டல மேலாளராக பணிபுரிகிறார். இந்நிறுவனத்தின் பீளமேடு கிளையில் பூபதி என்பவர் கிளை மேலாளராக உள்ளார். கடந்த, 22ம் தேதி கார்த்திகேயன் இக்கிளையில் தணிக்கை மேற்கொண்டார்.அப்போது, கடந்த ஜூன், 10 முதல் கடந்த, 22ம் தேதி வரை அடமானம் வைக்கப்பட்ட, 49 சவரன் தங்க நகையையும், ரூ.57 ஆயிரம் ரொக்கத்தையும் பூபதி கையாடல் செய்தது தெரியவந்தது. கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை